Tomeki

அம்மா என்ற ஆன்மா (சிறு கதை)

அம்மா என்ற ஆன்மா (சிறு கதை)

By சுவாமி பிரபஞ்சநாதன்

0 (0 Ratings)
0 Want to read0 Currently reading0 Have read

Publish Date

2019

Publisher

பராபரம்

Language

-

Pages

-

Description:

அம்மா என்ற ஆன்மா ===================== வாழ்க்கை என்ற பயணம் உலகப் பொருட்களாகிய சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும். அதாவது உலகப்பொருட்களிலிருந்து, உலகிலிருந்து விலக முடியாது. நாம் எதைச் செய்ய வேண்டுமானாலும் உலகப் பொருட் களுடன் வாழ்ந்த படியேதான் செய்து, சாதிக்க வேண்டும். பயணத்தின் (வாழ்க்கையின்) வேகமும் வெற்றியும், குதிரைகளைப் (எண்ணங்களைப்) பொறுத்து அமைகிறது. குதிரையின் வேகம் கடிவாளத்தால் (மனதால்) கட்டுப்படுகிறது. கடிவாளத்தின் (மனதின்) இயக்கம் தேரோட்டியைப் (புத்தியை) பொறுத்தது. எனவே, பயணத்தின் (வாழ்க்கையின்) வெற்றியோ தோல்வியோ தேரோட்டியால் (அறிவால்) மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. குதிரைகளுடன் (எண்ணங்களால்) போராடு வதினாலோ, கடிவாளத்தில் (மனதில்) மாற்றங்களைச் செய்வதினாலோ, எந்தப் பயனும் இல்லை. தேரோட்டி (புத்தி) திறமைசாலியாக இருந்தால் மட்டுமே, பயணம் (வாழ்க்கை) எவ்விதத் தடங்கலுமின்றி சிறப்பாக நடைபெறும். தேரோட்டி (புத்தி) தூங்கிக் கொண்டிருந்தால் பயணம் (வாழ்க்கை) என்னவாகும்? குதிரைகள் (எண்ணங்கள்) போகின்ற போக்கில், கடிவாளம் (மனம்) கட்டவிழ்ந்து, பல திசைகளில் குதிரைகள் (எண்ணங்கள்) பரந்து போகுமானால், அங்கு தேரோட்டி (புத்தி) விழிப்புடன் இல்லை என்பதை அறிந்து, இந்த சூழ்நிலையில் தேரோட்டியை (புத்தியை) எழுப்புவதே நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணியாகும். ஓம் தத் சத்!

subjectsAthma

PeopleSwami Prapanjanathan

PlacesCoimbatore,  Tamilnadu,  India.